என்னை ரயிலில் இருந்து தள்ளி கொல்ல பார்த்தார் அந்த நடிகர்.. பகீர் கிளப்பிய அண்ணாத்த பட நடிகை..!!
Author: Babu Lakshmanan17 February 2023, 2:11 pm
வயதானாலும் நடிப்பதில் இருக்கும் ஆர்வம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விட்டு போகவில்லை. அவரது நடிப்பில் வெளியான படம்தான் அண்ணாத்த. இதில், ரஜினிக்கு தாயாக நடித்தம் கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி நாயர். இவர் கேரளாவில் பிறந்தவராக இருந்தாலும், தமிழில் சரளமாக பேசக் கூடியவர் என்பதால், தமிழிலும் பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகிறது.
அண்மையில் விஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அனீஸ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவகாரத்து பெற்று விட்டனர். ஆவ்னி என்ற ஒரு மகளை அஞ்சலி நாயர்தான் வளர்த்தி வருகிறார். தற்போது, அஜித் ராஜு என்ற உதவி இயக்குநரை காதலித்து, இந்த மாதம்தான் 2வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், தனக்கு நடந்த கசப்பான நிகழ்வை அஞ்சலி நாயர் வெளியே சொல்லியுள்ளார். தமிழில் ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அப்படத்தின் உதவி இயக்குநரும், வில்லன் நடிகருமான ஒருவர் இவரை காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்தும் தன்னை வீட்டுக்கு அனுப்ப மறுத்ததாகவும் கூறிய அஞ்சலி நாயர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய அந்த நடிகர் முயற்சித்தாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் மீது போலீஸில் அளித்த புகாரின் பேரில், அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும், அதன்பிறகு எந்த தொந்தரவும் இல்லை என்று கூறியுள்ளார்.