அப்போது நானும் டியூட்டியில் இருந்தேன் – ரியல் “அமரன்” குறித்து அண்ணாமலை பதிவு!

Author:
4 November 2024, 1:02 pm

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் அமரன்.

இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மறைந்த இராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் தியாகத்தையும் அவர்கள் நாட்டிற்காக செய்யும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

amaran

இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார் இதில் அமரக் கதாபாத் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரிலே இது மிக முக்கியமான அழுத்தமான படம் என்று கூறலாம் என ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து மிகவும் எமோஷ்னலாக பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்தார்கள் .

மேலும் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் அமோக வசூல் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் அமரன் படம் பார்த்தது குறித்து நெகிழ்ச்சியாக தனது பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதாவது ராணுவ வீரர்களின் நேர்மை வீரம் தைரியம் உள்ளிட்ட பல அம்சங்களில் அமரன் திரைப்படம் முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். மக்களுக்காக ஒரு வீரன் தன்னை தியாகம் செய்யும்போது ஒரு குடும்பத்தின் இழப்பு என்பது மிகத் தெளிவாக இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.

நம்மை விட இராணுவ வீரர்கள் ஏன் சிறப்பானவர்கள் என்று கேட்டால் பெருமையுடன் ராணுவ உடைய அணிந்து கொண்டு விருப்பத்துடன் போர்க்களத்துக்கு செல்வார்கள். ஒரு ராணுவ வீரரின் குடும்பம் அதை பெருமையாக கருதும். மேஜர் முக்குந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் அந்த சமயத்தில் நான் காவல்துறை பொறுப்பில் இருந்தேன்.

annamalai

எனவே அவர் நம் தேசத்துக்காக செய்த தியாகம் எங்களுக்கு ஏதோ ஒன்று இருந்த ஒரு வலியையும் உணர்வையும் தந்தது. அந்த நினைவுகள் எனக்கு இன்னும் நீங்காமல் அப்படியே இருக்கிறது. ராஜ்குமார் பெரிய சாமியின் சிறப்பான இயக்கம், நடிகர் சிவகார்த்திகேயன் திரையுலகில் மிக முக்கியமான படமாக அமரன் திரைப்படம் அமைந்திருக்கிறது .

சாய் பல்லவியின் சாதாரண நடிப்பு எல்லோரது ரசனைக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசனுக்கு நன்றி. இந்த படம் ராணுவ வீரர்களுக்கும் நம் நாட்டுக்காக தங்களை இழந்தவர்களுக்கும் சிறந்த மரியாவையும் அஞ்சலியும் என நினைக்கிறேன். இந்திய ராணுவம் வாழ்க நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை பெருமையுடன் நான் மீண்டும் சொல்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அண்ணாமலையின் இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 67

    0

    0