இது என்னடா லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை.. அடி மேல் அடி.. அப்செட்டில் நயன்தாரா..!

Author: Vignesh
10 December 2023, 12:30 pm

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா தற்ப்போது ” அன்னபூரணி ” என்ற படத்தில் நடித்துள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ள படம், ‘அன்னபூரணி’.

இப்படத்தில் நயன்தாரா தனது கனவு லட்சியமான “செஃப் ” ஆசையை பல தடைகளை தகர்த்தெறிந்து ஜெயித்து காட்டுகிறார். இதில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

nayanthara

கடந்த சில நாட்களாக இப்படத்தின் ப்ரோமோஷன்களில் நயன்தாரா படு பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட தன் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார். அப்படி பேட்டி ஒன்றில் பேசிய அவர், தயவு செய்து என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரும் அழைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டார். காரணம், அந்த பட்டத்தை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது என வெளிப்படையாக கூறி உள்ளார்.

nayanthara

முன்னதாக, ஹீரோக்களுக்கு நிகராக நயன்தாரா மிகப்பெரும் மார்க்கெட் வைத்திருந்தார். ஆனால், யார் கண் பட்டதோ சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார். சுமார் 5 படங்கள் தொடர்ந்து தோல்வி கொடுக்க தற்போது, ரிலிஸாகிய அன்னபூரணி படமும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படம் இதுவரை 5 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 350

    0

    0