இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அந்நியன். பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அந்நியன் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.இந்த திரைப்படத்தில் அம்பி,அன்னியன், ரெமோ என மூன்று விதமான கதாபாத்திரங்களில் விக்ரம் திறமையாக நடித்திருப்பார். மல்டிபிள் பர்சனாலிட்டி பற்றிய கதையாக இருந்தது.
அந்நியன் திரைப்படம் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாம்.சிட்னி ஷெல்டன் ஒரு அமெரிக்க எழுத்தாளர், மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் திரைப்படங்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். நாவல்கள் மூலமாக இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
இவர் 1998ல் எழுதிய ஒரு நாவல் “டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்” இந்த நாவலின் ஆஷ்லே கதாபாத்திரமானது மல்டிபிள் பர்சனாலிட்டி கொண்டதாக காட்டப்பட்டிருக்கும்.டெல் மீ யுவர் ட்ரீம்ஸ் நாவலும் விற்பனையில் சாதனை படைத்தது.
அந்நியன் திரைப்படமானது பிரான்சில் பிரெஞ்சு மொழியில் டப்பிங் செய்து திரையிடப்பட்ட முதல் திரைப்படமாக சொல்லப் படுகிறது.