மனோபாலாவை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 1:43 pm

மனோபாலாவை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு வயது 70 இவர் பல தமிழ் திரைப்படங்களை குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து வந்தார்.

கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் புகழ்பெற்ற செவ்வாழை ராசு மைனா, கிழக்குச் சீமையிலே, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 70 வயதில் காலமானார்.

இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி