ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
Author: Prasad10 April 2025, 7:35 pm
ரசிகர்களுக்கான படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த பலரும் “இது ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாது படம் முழுவதும் அஜித்குமாரின் பழைய திரைப்படங்களின் மாஷ் ஆப் போல் உள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை வலைப்பேச்சு அந்தணன் தனது நகைச்சுவையான ஸ்டைலில் விமர்சித்துள்ளார்.

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம்

“அருப்புக்கோட்டை அஜித் ரசிகர் மன்றத் தலைவர் ஒரு படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இத்திரைப்படம். முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படம் இது. நியாயமாக இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்காமல் வேறு யாராவது இயக்கியிருந்தால் முன் வரிசையில் உட்கார்ந்து விசில் அடிக்கக்கூடிய முதல் ஆளாக ஆதிக் ரவிச்சந்திரன் இருப்பார்” என நையாண்டியுடன் இத்திரைப்படத்தை விமர்சித்துள்ளார்.