ஜல்லிக்கட்டு கூட்டத்தை விட விஜய் மாநாட்டுக்கு அதிக கூட்டம் : கலாய்க்கிறாரோ? வெளியான வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 12:40 pm

சினிமாவை விட்டு ஒதுங்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். தனது கடைசி படமான தளபதி 69ல் நடித்து வரும் விஜய் பின்னர் முழு அரசியலில் ஈடுபட உள்ளார்.

நாளை அக்.,27 தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், காமராஜர், சேரர் சோழர் பாண்டியருக்கு என கட் அவுட்டுகளை வைத்து அதகளப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் 2017ல் ஜல்லிக்கட்டு வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்த மிகப்பெரிய போராட்டம் நடத்தியது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

அதை விட கூட்டம் தவெக மாநாட்டுக்கு வரும் என பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். எங்கும் திரும்பினாலும் தலை தான் தெரியும் அளவுக்கு கூட்டம் மொய்க்கப் போகுது என வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது X தளத்தில் வைரலாகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?