கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது என தெரிவித்து இருந்தார். இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல youtube வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார். அதில், ஒருவரை நம்பி வீட்டுக்குள் அழைக்கும் போது அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். அதேபோல, இந்த விவகாரத்தை மறுத்து அறிக்கையை வெளியிட்ட இமானின் முன்னாள் மனைவி சிவகார்த்திகேயன் நல்லவர், வல்லவர் என்று சொன்னபோது உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு என்றுதான் கேட்க தோன்றுகிறது.
இந்த விவகாரத்தில் மோனிகா கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்திருக்கலாம். இந்த விவகாரத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளது. இருவரின் இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும், சிவகார்த்திகேயன் செய்துவிட்டார். சிவகார்த்திகேயனுக்கு youtube இல் ஆதரவாக பேசுபவர்களுக்கு பெரும் தொகையும், எதிராக பேசுபவர்களின் youtube சேனலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒரு ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.