படுக்கைக்கு அழைத்தபோது.. படவாய்ப்புக்காக பகீர் கிளப்பிய அனு இம்மானுவேல்..!
Author: Vignesh9 May 2024, 11:50 am
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!
அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அனு இமானுவேல் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. என்னிடம் படவாய்ப்பு தருவதாக கூறி ஒருவர் படுக்கைக்கு கூப்பிட்டார்.
மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!
அதை பார்த்து நான் பயந்துவிடாமல் எனது குடும்பத்தினருடன் அந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். ஆனால், நடிகைகள் யாரும் அப்படி செய்வதில்லை. இதுபோன்ற பிரச்சனை உங்கள் குடும்பத்தினருடன் பேசி அவர்களை பாதுகாப்பிற்காக கூடவே வைத்திருங்கள் அவர்களின் உதவியுடன் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து வெளியில் வாங்க என அறிவுரை கூறியுள்ளார். மேலும், பெண்களை இப்படி வளரவிடாமல் தடுக்கும் நபர்களை பார்த்து பயப்படாமல் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறி வர வேண்டும் என அனு இம்மானுவேல் கூறி இருக்கிறார்.