மீண்டும் மிரட்ட வரும் முட்டை கண்ணு வில்லன் – நயன்தாராவை கொல நடுங்க வச்ச கொடூரன்!

Author: Shree
1 April 2023, 11:31 am

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார்.

இவர் தனது திரைப் பிரவேசத்தை பான்ச் என்கிற இதுவரை வெளியிடப்படாத திரைப்படத்தில் தொடங்கினார். இவர் தனது பிளாக் ஃபிரைடே(Black Friday), தி லன்ச் பாக்ஸ்(The lunch Box), கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் போன்ற படங்களின் மூலம் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து கொலை நடுங்க வைத்தார். இந்நிலையில் தற்போது சசிகுமார் இயக்கப் போகும் ” குற்றப்பரம்பரை” படத்தில் அனுராக் வில்லனாக நடிக்க உள்ளார்.

நாவல் ஆன குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் ஆக உருவாகவுள்ளது. இதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் ராணா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். குறிப்பாக வில்லன் அனுராக் காஷ்யப்பிற்காக இந்த வெப் சீரிஸை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ