பாலிவுட் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் தனது திரைப் பிரவேசத்தை பான்ச் என்கிற இதுவரை வெளியிடப்படாத திரைப்படத்தில் தொடங்கினார். இவர் தனது பிளாக் ஃபிரைடே(Black Friday), தி லன்ச் பாக்ஸ்(The lunch Box), கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் போன்ற படங்களின் மூலம் பெரிதும் பாராட்டப்பட்டார்.
இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து கொலை நடுங்க வைத்தார். தற்போது சசிகுமார் இயக்கப் போகும் ” குற்றப்பரம்பரை” படத்தில் அனுராக் வில்லனாக நடிக்க உள்ளார். நாவல் ஆன குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் ஆக உருவாகவுள்ளது. இதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் ராணா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். குறிப்பாக வில்லன் அனுராக் காஷ்யப்பிற்காக இந்த வெப் சீரிஸை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனிடையே விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் அவர் முக்கிய ரோல் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் அனுராக் காஷ்யப் ஸ்கேர்டு கேம்ஸ் பாகம் 2 படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த நடிகை அம்ருதா சுபாஷூன் மாதாவிடாய் தேதி குறித்து கேட்டதாக நடிகை அம்ருதா பேட்டி ஒன்றில் கூறி பகீர் கிளப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஸ்கேர்டு கேம்ஸ் பாகம் 2 படம் ஆண், பெண் பேதங்கள் இல்லாமல் பழகுவதை வெளிப்படுத்தும். இந்த படத்தில் அனுராக் உடன் எனது முதல் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தேன்.
அதில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அதனால் நெருக்கமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேரங்களை சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் எனது மாதவிடாய் தேதி குறித்து என்னிடம் கேட்டறிந்தார். காரணம் அத்தகைய தேதிகளில் உங்களால் இக்காட்சிகளில் நடிக்க முடியுமா? எனவும் கேட்டார். அதன் பின் எனக்கு சவுகரியமான நாட்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள் என அவர் தெரிவித்தார். நடிகை அம்ருதா சுபாஷ் சமீபத்தில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்திருந்தார்.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.