நான் ரெடி… நீங்க ரெடியா? கோலிவுட்டில் இயக்குனராகும் அனுராக் காஷ்யப் – ஹீரோ யார் தெரியுமா?
Author: Rajesh8 December 2023, 12:10 pm
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் தனது திரைப் பிரவேசத்தை பான்ச் என்கிற இதுவரை வெளியிடப்படாத திரைப்படத்தில் தொடங்கினார். இவர் தனது பிளாக் ஃபிரைடே(Black Friday), தி லன்ச் பாக்ஸ்(The lunch Box), கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் போன்ற படங்களின் மூலம் பெரிதும் பாராட்டப்பட்டார்.
இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து கொலை நடுங்க வைத்தார். அதையடுத்து விஜய்யின் லியோ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்க உள்ளாராம். பான் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இதனை உறுதி படுத்திய ஜிவி, அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் நடிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக நான் அவருடன் ஒரு திரைப்படத்தில் பின்னணி இசைக்காக பணியாற்றியுள்ளேன் என கூறினார். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படத்திற்காக தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.