விஜய் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. எனக்கு ஷாக்’ல ஒன்னுமே பண்ண முடில.. அனுஷ்கா பேட்டி
Author: Rajesh20 August 2023, 12:50 pm
அருந்ததி படத்தின் மூலம் இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அனுஷ்கா. இதனைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, தென்னந்திய திரையுலகில் பிரபல நடிகையாக நடிகை அனுஷ்கா இருந்து வருகிறார்.
இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெரியளவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அனுஷ்கா, வேட்டைக்காரன் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த நிகழ்வு ஒன்றை பற்றி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “என் ஊச்சி மண்டேலே என்ற பாடலின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு விஜய் அமர்ந்து அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தார்.
ஷாட்டுக்காக நாங்கள் ஒன்றாக நின்றோம். ஷாட் ரெடி என சொன்னதும் அவர் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிட்டேன். அவரு அப்படி ஆடுவாருனு நான் நினைக்கல. என்னால் ஒண்ணுமே பண்ண முடில. ஒரு முறை பார்த்துவிட்டு அவர் எப்படி அந்த மாதிரி டான்ஸ் ஆடுனாருனு எனக்கு தெரில” என அனுஷ்கா கூறியுள்ளார்.