விஜய் கூட நடிச்சதுக்கு இப்படியான வாய்ப்பு தான் வருது.. புலம்பித் தவிக்கும் பிரபல நடிகை..!

Author: Vignesh
28 June 2024, 9:58 am
Vijay
Quick Share

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் ஜீவா, சந்தானம் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படத்தில், நடிகை அனுயா பகவத் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர், சம்பளம், நகரம் போன்ற படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர், இடைவெளிக்கு பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் துணை நடிகையாக நடித்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனுயா நண்பன் படத்தில் நடித்த பின் தனக்கு வரும் வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து உள்ளார்.

anuya

நண்பன் படத்தின் போது மூன்று நடிகர்கள் என்னை தூக்கிட்டு வரும்போது, எனக்கு சந்தோசமாக இருந்தது. விஜயை அடிக்கும் காட்சிக்காக நான் பயந்தேன். மெதுவாக, அடித்தபோது விஜய் சார் வேகமாக அடியுங்கள் என்று கூறினார். மேலும், பேசிய அனுயா நண்பன் படத்தில், எனக்கு அக்கா ரோல் தான் தொடர்ச்சியாக வருகிறது. நண்பன் எனக்கு கிரேட் சாய்சாக இல்லை. அதனால், பலரும் அக்கா ரோல் அம்மா ரோளுக்கு தான் இவர் செட் ஆகுவார் என்று நினைத்து விட்டார்கள்.

anuya

அது என் நடிப்புதான் தவிர, நான் அப்படி இல்லை எந்த வயது ரோலாக இருந்தாலும், சரி நான் நடிக்க தயாராக உள்ளேன். த்ரிஷா கூட அம்மா ரோலில் நடித்திருக்கிறார். கரீனா கபூர் கூட நடித்திருக்கிறார். நடிகைகளை வயது படுத்தி பார்க்க வேண்டாம் என்று கூறிக் கொள்கிறேன். நண்பன் படத்திற்கு, முன் எனக்கு இப்படி ஒரு பயமில்லை. ஷங்கர் சாருக்காக நடித்தேன். அவருடன் பணியாற்றியது என்னுடைய கனவு என்று அனுயா வெளிப்படையாக பேசியுள்ளார்.

anuya
Views: - 61

0

0

Leave a Reply