AK 62 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறதா? தயாரிப்பு நிறுவனம் வைத்த சஸ்பென்ஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 8:12 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்கள் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், ஏற்கனவே விஜய் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படத்தில் அப்பேடட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், லைகா நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஏற்கனவே அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு லைகா நிறுவனம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட உள்ளதாக தனது ட்விட்ட ர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை இது அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் குறித்த செய்தியாக இருக்குமோ? அல்லது ரஜினியின் 171வது படத்தின் அறிவிப்பாக இருக்குமோ? பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த அப்டேட்டாக இருக்குமோ என்ற பல சந்தேகங்களை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!
  • Close menu