“ரொம்ப எமோஷனலான மொமெண்ட் இது” – கவினை பத்தி அப்படி சொன்னது தப்பு தான்.. பிரபல நடிகை உருக்கம்..!
Author: Vignesh10 February 2023, 5:30 pm
தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.
கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய போட்டோh சூட் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த கவின் தற்போது ஹீரோவாக டாடா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பிக் பாஸுக்கு பிறகு அவர் நடிப்பில் வந்த லிப்ட் என்ற படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி லிப்ட் படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில், தற்போது அவர் ஹீரோவாக நடித்து இருக்கும் டாடா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.
இதனிடையே, டாடா படம் திரைக்கு வந்து இருக்கும் நிலையில் அந்த படத்தில் நடித்து இருக்கும் அபர்ணா தாஸ் கவின் பற்றி ஒரு பெரிய பதிவை போட்டிருக்கிறார். அதில், “தான் அளித்த பேட்டிகளில் கவின் ரொம்ப கோபக்காரர் என தெரிவித்து இருந்ததாகவும், ஆனால் அவர் சரியான விஷயங்களுக்காக தான் அப்படி இருக்கிறார் என்று தற்போது புரிந்து கொண்டதாகவும்,”
மேலும், “கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை தெரியும் எனவும், நீங்கள் இல்லை என்றால் இந்த படமே வந்திருக்காது” இது மிகவும் மோஷனலான மொமெண்ட் என அபர்ணா தாஸ் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
Couldn’t write so much here so just adding it as a pic whatever I wanted to say.@Kavin_m_0431 #Kavin #DADA pic.twitter.com/YFoemsmAOI
— Aparna Das (@aparnaDasss) February 9, 2023