அப்புவாக கமல் நடித்தது எப்படி? ரகசியத்தை சொல்லும் அபூர்வ சிங்கீதம் 3 -வது EPISODE…!!

Author: Selvan
24 December 2024, 2:58 pm

அபூர்வ சகோதர்கள் படத்தின் சுவாரசிய தகவல்களோடு EPISODE-3

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 60-க்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ்.இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் எழுத்தாளர்,தயரிப்பாளர்,நடிகர் என பல வித திறமைகளுக்கு சொந்தக்காரர்.

Singeetam Srinivasa Rao tribute

இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.அதிலும் குறிப்பாக இவர்கள் சேர்ந்து பணிபுரிந்த ராஜ பார்வை ,அபூர்வ சகோதரர்கள்,மைக்கேல் மதன காம ராஜன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,வணிகரீதியாகவும் நல்ல வசூலை பெற்றது.

இதையும் படியுங்க: ரகசிய வீடு..எல்லை மீறிய உறவு…வாரிசு குடும்பத்துக்கு தொடரும் அவலநிலை…!

இந்நிலையில்,இவரை கவுரவிக்கும் விதமாக இயக்குனர்கள் மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் சந்தான பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தொகுத்து வழங்கும் அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சி மார்ச் 17 அன்று சென்னையில் துவங்கியது.

பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு,இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் உடன் இருந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்வை கமல்ஹாசன் தற்போது EPISODE ஆக வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் முதல் எபிசோடில் கமல்ஹாசனின் 100-வது படமாக வெளிவந்த ராஜபார்வை திரைப்படத்தை பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. இதனுடைய இரண்டாவது எபிசோடில் இவர் இயற்றி பல மொழிகளில் வெளியான புஷ்பக விமான திரைப்படத்தை பற்றிய பல அறிய தகவல்கள் இடம்பெற்றன.தற்போது 3-வது எபிசொட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இதில் அபூர்வ சகோதர்கள் படத்தில் நடந்த பல தகவல்களை இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் கூறுகிறார்.மேலும் பல சினிமா நட்சத்திரங்கள் அவரிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

அதிலும் குறிப்பாக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்,வைரமுத்து,மணிரத்தினம் என பலர் சுவாரசியமான கேள்விகளை கேட்க,அதற்கு தன்னுடைய மலரும் நினைவுகளோடு பதில்களை சொல்லும் தருணங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த அபூர்வ சிங்கீதம் தொடர் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 61

    0

    0

    Leave a Reply