‘அப்பா ’ படத்தில் வரும் குட்டி பொண்ணா இது?..நெடுநெடுவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே..!
Author: Vignesh7 May 2024, 5:12 pm
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மா கணக்கு என்ற படத்தில் அமலாபாலின் மகளாக நடித்திருந்தவர் யுவ லட்சுமி. இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அப்பா திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இவர் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரேயடியா ஏறுதே.. கோடியில் புரளும் நடிகை தமன்னா.. சம்பளத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
மேலும், சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் யுவ லட்சுமி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், யுவ லட்சுமியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் யுவ லட்சுமி ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே என்று கமெண்ட்களின் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

