நயன்தாரா வாழ்க்கை துணை ஆன பின் எல்லாமே யோகம்தான் : விக்னேஷ் சிவனுக்கு குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 10:11 pm

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிருந்தா மாஸ்டர் நடன அசைவுகளை சொல்லிக் கொடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த அட்டகாசமான செஸ் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

அதுமட்டுமின்றி நேற்று பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழா நிகழ்ச்சிகளையும் இயக்கியது இயக்குநர் விக்னேஷ் சிவன் தான். இந்நிலையில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நிகழ்ச்சி முடிந்து சென்றதும் உடனடியாக போனில் அழைத்து தன்னை பாராட்டியதையும் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நடிகர் ரஜினிகாந்தின் அருகிலேயே அமர்ந்திருந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நடிக்க வைத்த பாடல் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஏ.ஆர். ரஹ்மான், அதிதி ஷங்கர் உள்ளிட்டோருக்கு நன்றி கூறியுள்ளார்.

இப்படி விக்னேஷ் சிவனக்கு பாராட்டு மழை குவிந்து கொண்டு வருவதால் நயன்தாராவை திருமணம் செய்த பின் அவருக்கு அடிக்குது யோகம் என கோலிவுட்டில் காத்துவாக்குல பேசிக் கொள்கின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!