கோடிகளை கொட்டி காஸ்ட்லியான சொகுசு கார் வாங்கிய AR.முருகதாஸ்.. பகுமானமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரல்..!

Author: Vignesh
19 January 2024, 12:13 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ. ஆர். முருகதாஸ் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பலதிறமைகளை கொண்டிருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, ஸ்பைடர் , சர்கார்,தர்பார் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். எஸ்கே 22 என இப்படத்திற்கு தற்போது, ஒர்க்கிங் டைட்டில் வைத்துள்ளனர். விரைவில், இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க போவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்து எந்த ஒரு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

a r murugadoss

இந்நிலையில், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்போது புதிய bmw x7 காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 1.26 கோடி முதல் 1.40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. காரை வாங்கிய பின் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஏ ஆர் முருகதாஸ் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

a r murugadoss
  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…