விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

Author: Hariharasudhan
10 March 2025, 2:13 pm

சல்மான் கான் – ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

மும்பை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்கந்தர். ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதனையடுத்து, இப்படம் விஜயின் சர்கார் படத்தின் ரீமேக் என தகவல் பரவியது. இந்த நிலையில், இது குறித்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், “சிக்கந்தர் படம் முழுக்க முழுக்க புதுமையான கதை. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், உண்மைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். இதன் கதை எந்தவொரு படத்தின் மறு உருவாக்கமுமோ அல்லது தழுவலோ கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தனது மதராஸி படத்தின் பணிகளைத் தொடங்கி உள்ளதாகத் தெரிகிறது.

AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar

சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையேப் பெற்றது. முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ கருப்பையா ஆகியோரது நடிப்பில் வெளியாகி குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!