பரிதாபங்களா மதராஸி கதை? ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அந்த வார்த்தை!

Author: Hariharasudhan
18 February 2025, 5:53 pm

வட இந்தியாவில் நம்மை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மதராஸி படத்தின் கதை என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. லட்சுமி மூவிஸ் சார்பில் என்.லட்சுமி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்தில், ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் சபீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் டைட்டில் டீசர், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியானது. இதன்படி, இப்படத்திற்கு ‘மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மதராஸி படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “தற்போது சிவா (சிவகார்த்திகேயன்) ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். எனவே, மதராஸி திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில், அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக கண்டிப்பாக அமையும்.

Madharasi one line

இந்தப் படம், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்து கதைக்களம் இருக்கும். வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களைக் குறிப்பிடும் வார்த்தை தான் மதராஸி. அதனால்தான், படத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: படம் நடிக்க கூப்பிடமாட்டிங்கறாங்க படுக்கத்தான் கூப்பிடுறாங்க : பிரபல நடிகை ஆவேசம்!

மேலும், வடக்கன்ஸ் பாவங்கள், ரயில் பாவங்கள் என பிரபல யூடியூபர்ஸான கோபி – சுதாகர் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருவதை, நகைச்சுவைக்குப் பதிலாக உணர்வுப்பூர்வமான படமாக மதராஸி இருக்கும் என ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் கருதுகின்றனர்.

மேலும், ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார். இதனை முடித்துவிட்டு ‘மதராஸி’ படத்தின் மீதி படப்படிப்பைத் தொடர்வார் என்று தெரிகிறது. அதேநேரம், சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Follow Google News

    Leave a Reply