Old is Gold.. எஸ்கே நம்பிக்கை கைகொடுக்குமா? சிவகார்த்திகேயனும், பழைய டைட்டில்களும்!
Author: Hariharasudhan17 February 2025, 1:01 pm
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு மதராஸி என்ற அர்ஜுன் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் காம்போவின் படத்திற்கு மதராஸி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் மற்றும் ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார்.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து, இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, இப்படத்துக்கு பெயரிடப்படாமலே 90 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து முருகதாஸ் மீண்டும் இயக்குநராக களமிறங்கி வருகிறார். அதேபோல், 2006ஆம் ஆண்டு ‘மதராஸி’ என்ற பெயரில் அர்ஜுன் நடித்து இயக்கிய படம் வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: விஜயின் வியாபாரத்துக்கு மட்டும் அது தேவையா? சுற்றி வளைக்கும் பாஜக!
அதேநேரம், ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா நடித்து வரும் படத்திற்கும், சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தலைப்பை வைப்பத்தில் அதன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலும், சிவாஜி ரசிகர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் இருந்துகொண்டே உள்ளன.
சிவகார்த்திகேயன் படங்களும், பழைய டைட்டில்களும்:
எதிர்நீச்சல் – நாகேஷ் (1968) – எதிர்நீச்சல் (2013)
காக்கி சட்டை – கமல்ஹாசன் (1985) – காக்கி சட்டை (2015)
வேலைக்காரன் – ரஜினிகாந்த் (1987) – வேலைக்காரன் (2017)
ஹீரோ – ஜாக்கி ஷெராஃப் (1983 – இந்தி), சூரஜ் பஞ்சோலி (2015 – இந்தி) – ஹீரோ (2019)
டான் – அமிதாப் பச்சன் (1978 – இந்தி), ஷாருக்கான் (2006 – இந்தி) – டான் (2022),
மாவீரன் – ரஜினிகாந்த் (1986) – மாவீரன் (2023)
அமரன் – கார்த்திக் (1992) – அமரன் (2024)
பராசக்தி – சிவாஜி கணேசன் (1952) – பராசக்தி (2025)
மதராஸி – அர்ஜுன் (2006) – மதராஸி (2025).