AR.ரஹ்மான் என் மண்ணுக்கு வந்து என் படத்தை பார்த்தார்…. நெகிழ்ந்துப்போன மாரி செல்வராஜ்!
Author: Shree12 June 2023, 4:45 pm
தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.
அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.
இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்நிலையில் மாரிசெல்வராஜ் பேட்டி ஒன்றில், AR. ரஹ்மான் சார்,மாமன்னன் படத்தை முதன் முதன் முதலில் திருநெல்வேலிக்கு வந்து தான் பார்த்தார். நான் படத்தை பார்க்கவேண்டும் என கேட்டதும். இப்போது நான் ஷூட்டிங்கில் இருக்கிறேன். திரும்பி வர 1 மாதம் ஆகும் சார். நீங்க படத்தை பார்க்க சென்னையிலே ஏற்பாடு செய்கிறேன் என சொன்னேன். ஆனால், அவர் உங்க கூட தான் படத்தை பார்க்கணும் என கூறி என் மண்ணுக்கு வந்து என் படத்தை பார்த்தார் என கூறி நெகிழ்ந்தார்.