முதுகில் குத்திய ஏ ஆர் ரகுமான்?.. ஆதங்கத்தில் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
6 March 2024, 11:11 am

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான என்ஜாய் என்ஜாமி பாடல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தரப்பில் வெளியானது. இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதில், சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் தெருக்குறள் அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.

enjoy enjaami

மிகப் பெரிய ஹிட்டான அந்த பாடல் தொடர்பாக ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு இடையே பல்வேறு சர்ச்சைகள் ஒரு வருடத்துக்கு முன்பே வெடித்திருந்தது. இப்பாடலை, எழுதி கம்போஸ் செய்து பாடியது நான் யாரும் எனக்கு மெட்டு தரவில்லை என அறிவு கூற அவருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே இருந்த பிரச்சினை வெளியே தெரிய வந்தது.

enjoy enjaami

இந்நிலையில், என்ஜாய் எஞ்சாமி படல் குறித்து தற்போது, சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மியூசிக் நிறுவனம் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பில்லியன் ரசிகர்களுக்கு மேல் பார்க்கப்பட்ட பாடலுக்கு ஆர்டிஸ்ட்களுக்கு ஒரு ரூபாய் கூட இதுவரை வரவில்லை என வருத்துடன் தெரிவித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த யூடியூப் சேனலை ரகுமான் தான் இங்கு அறிமுகம் செய்துள்ளார்.
மேலும், ரகுமான் தொடங்கி வைத்த சேனல் இப்படி ஒரு மோசடி செய்ததா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், ஏ ஆர் ரகுமான் சந்தோஷ் நாராயணனின் முதுகில் குத்தி விட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, ஏ ஆர் ரஹ்மான் மேல் விமர்சனங்கள் எழ அவர் அதற்கு விளக்கமளித்திருந்தார்.

enjoy enjaami

மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் தான் மட்டுமின்றி பாடலை அறிமுகப்படுத்திய ஏ ஆர் ரகுமானும் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாக கூறிய சந்தோஷ் நாராயணன் தான் மட்டும் இன்றி இப்பாடலில் பணியாற்றிய தீ, அறிவு உள்ளிட்டவர்களுக்கும் வருமானம் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார். மேலும், தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் வருவதாகவும், பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனையில், தான் பா.ரஞ்சித் மற்றும் அறிவுக்கு முழு ஆதரவு அளிப்பேன் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ