மனைவியுடன் தேனிலவு… பக்கத்து அறையில் ஏ.ஆர்.ரகுமான்…!கூட யார்?
Author: Selvan21 November 2024, 5:41 pm
தேன்நிலவில் அப்படி என்ன நடந்தது
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து செய்தி நாடெங்கும் இருக்க கூடிய அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

சமூக வலைத்தளம் முழுவதும் ஹாட் ட்ரெண்டிங்கில் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய தகவல் தான் வைரலாக பரவுகிறது.
அந்தவகையில் திருமணம் முடிந்தவுடன் தன்னுடைய மனைவியை தேன்நிலவுக்கு ஒரு மலைப்பகுதிக்கு கூப்பிட்டு சென்றுள்ளார்.அங்கு அவர் மனைவியுடன் நேரத்தை செலவிடுவார் என்று பார்த்தால்,அங்கு இரவு அறைக்கு சென்றவுடன் இவர் தனியாக வேற ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார்.
சாய்ரா பானு மற்றொரு அறையில் அசந்து தூங்கிட்டு இருந்திருக்கிறார்.அப்போது அவருடைய மனைவியின் தங்கை கணவர் நடிகர் ரகுமான் ஒரு மணிக்கு போன் செய்து ஏ.ஆர்.ரகுமான் எங்கனு கேட்க..அதற்கு அசந்த தூக்கத்தில் அவருடைய மனைவி அவர் எங்க போனார்னு தெரியவில்லை என்று சொல்லிட்டு வெளியே சென்று பார்த்த போது,அங்கு பக்கத்து அறையில் இருந்து வீணை சவுண்ட் வந்தது.

இதையும் படியுங்க: ஜி வி பிரகாஷ் உடன் இணையப்போகும் சைந்தவி…சர்ப்ரைஸ் வீடியோவால் கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்…!
இதனை ஏ.ஆர் ரகுமானின் மனைவியின் தங்கை கணவர் நடிகர் ரகுமான் ஒரு பேட்டியில் நகைச்சுவையாக தெரிவித்திருப்பார்.
தேன்நிலவுக்கு சென்ற இடத்தில கூட அவர் இசையை அவ்ளோ காதல் செய்து,வீணை கூட தன்னுடைய நேரத்தை செலவளித்துள்ளார்.இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.