சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.
அந்தவகையில் அண்மையில் மனைவி சாய்ரா பானுடன் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் மனைவி பேச தொடங்கும்போது ரஹ்மான் ‘ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு’ என மைக்கிலேயே கூறினார். இருப்பினும் எனக்கு தமிழில் சரளமாக ஆக பேச தெரியாது என அவரது மனைவி ஆங்கிலத்திலேயே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மான் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தன் மகனை மேடையில் பேச வைத்தார். அப்போது, இங்க பொண்ணுங்களா நெறைய பேரு இருகாங்க சந்தோஷமா இருக்கா? பயமா இருக்கா? என கேட்டார். அதற்கு அவரது மகன் அமீன், இங்கிலீஷ்லே பேசி பீட்டர் விட்டார். உடனே ரஹ்மான்… தமிழ்ல பேசுப்பா என கூற அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. மகனையே இப்படி கலாய்க்கிறாரே நம்ம ரஹ்மான் என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.