இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழராக உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.
திருமண வாழ்க்கை என்று பார்த்தால் இவர் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏ.ஆர். அமீன் என்ற மகனும். கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் என்ற இரு மகளும் பிறந்தனர். அவ்வப்போது சில விழாக்களில் மனைவி சாய்ரா பானுடன் கலந்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்க முன்பு நீளமான முடி வச்சிருந்தீங்க அதை ஏன் எடுத்தீங்க? என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ. ஆர் ரஹ்மான், ஒரு கட்டத்திற்கு மேல் என் மனைவி நீங்க இந்த முடி எடுக்கலன்னா உங்க பக்கத்துலயே படுக்கமாட்டேனு சொல்லிட்டாங்க. அதுமட்டும் இல்லாமல், நாங்க தான் நீளமான முடி வச்சிருக்கோம்…. உங்களுக்கு எதுக்கு என கேட்டு அசிங்கப்படுத்திவிட்டார். அதனால் எடுத்தது தான் என கூறி ரகசியத்தை உடைத்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.