முன்னாள் மனைவி என்று கூப்பிட வேண்டாம்..சாய்ரா பானு வேண்டுகோள்.!
Author: Selvan16 March 2025, 6:12 pm
நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை
கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு திருமண உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: விஜய் டிவி ஷோவுக்கு முட்டுக்கட்டை..யார் செய்த சதி.. ரசிகர்கள் ஆவேசம்.!
இந்த நிலையில் தற்போது சாய்ரா பானு சமூக ஊடங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்,அதாவது என்னை ஏ ஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இன்று காலை, ஏ.ஆர்.ரகுமானுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.அவர் தற்போது நலமாக இருப்பதாகவும்,மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சாய்ரா பானு கூறியது,ரகுமான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை,கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நல பிரச்னையால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்,அவருக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. எனவே, முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம்.என அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு மீண்டும் இணைவார்களா?அல்லது விவாகரத்து உறுதியாக நடைபெறுமா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.