விருது விழாவில் மனைவியை திட்டிய ஏஆர். ரஹ்மான்? -வைரலாகும் வீடியோ!

Author: Shree
26 April 2023, 5:59 pm

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.

அந்தவகையில் அண்மையில் மனைவி சாய்ரா பானுடன் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் மனைவி பேச தொடங்கும்போது ரஹ்மான் ‘ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு’ என மைக்கிலேயே கூறினார். இருப்பினும் எனக்கு தமிழில் சரளமாக ஆக பேச தெரியாது என அவரது மனைவி ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…