ரகுமான் போட்ட 3 கண்டிஷன் ..சாய்ரா கேட்ட கேள்வி…பிரிவிற்கு காரணமா?
Author: Selvan20 November 2024, 1:41 pm
29 வருட திருமண வாழ்க்கை முடிந்த தருணம்
ஏ ஆர் ரகுமானின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை நேற்றோடு முடிவுக்கு வந்தது.அவருடைய மனைவி சாய்ரா பானு தன்னுடைய வழக்கறிஞர் மூலம் விவாகரத்து தகவலை வெளியிட்டார்.
தமிழ் திரையுலகில் 1992ம் ஆண்டில் வெளிவந்த ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ரகுமானின் இசை பெருமையாக பேசப்பட்டது.
அதன்பிறகு ஏ ஆர் ரகுமான் பிஸியானானர். அதிகமான படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்த காலத்தில் தாய் கரீமா பேகம், ஏஆர் ரகுமானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்.அதன்படி ஏ ஆர் ரகுமான் நீங்களே எனக்கு ஒரு பெண்ணை பாருங்கள். நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏ ஆர் ரகுமான் போட்ட கண்டிஷன் பதிலுக்கு மனைவி கேட்ட கேள்வி
அதோடு 3 கண்டிசன்களையும் அவர் தெரிவித்தார் அதில் முதல் கண்டிஷன் தனக்கு மனைவியாக வரும் பெண் நன்றாக படித்திருக்க வேண்டும் எனவும் 2வது கண்டிஷன் அழகாக இருக்க வேண்டும் எனவும் 3வது கண்டிஷனாக அந்த பெண் பணிவாகவும், தன்மீது அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கண்டிஷன்களை மனதில் வைத்து தான் ஏஆர் ரஹ்மானின் தாய் கரீமா பேகம் பெண் தேட தொடங்கினார்.
இதையும் படியுங்க: உடைந்து போன ஏ.ஆர்.ரஹ்மான்….கண்ணீருடன் பதிவு..!
அப்போது சாய்ரா பானுவை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் திருமணம் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சென்னையில் நடந்தது. திருமணத்துக்கு முன்பு சாய்ரா பானு மொத்தம் 2 கேள்விகளை ஏஆர் ரகுமானிடம் கேட்டு இருந்தார். அதாவது ”திருமணத்துக்கு பிறகு ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளலாமா? என்று ஒரு கேள்வியும், கார் தொடர்ந்து ஓட்டி கொள்ளலாமா? என்றும் அவர் கேட்டாராம். அதற்கு ஏ ஆர் ரகுமான் ஓகே சொன்ன பிறகே திருமணம் நடைபெற்றது என்று சாய்ரா பானு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பார்.இவர்களுக்கு 2 மகளும்,ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் ரகுமான் வேற ஏதாவுது புது கண்டிஷன் மனைவி சாய்ரா பானுக்கு சொன்னாரா இல்லை ரகுமான் குடும்பத்தின் உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்தார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.