என் மனைவியின் மிகப்பெரிய ஆசை இது தான்…. AR ரஹ்மான் சொன்னதை கேட்டு ஆடிப்போன ஆண்கள்!
Author: Shree21 July 2023, 10:18 am
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழராக உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.
திருமண வாழ்க்கை என்று பார்த்தால் இவர் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏ.ஆர். அமீன் என்ற மகனும். கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் என்ற இரு மகளும் பிறந்தனர். அவ்வப்போது சில விழாக்களில் மனைவி சாய்ரா பானுடன் கலந்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் என் மனைவியின் மிகப்பெரிய ஆசை என கூறி, நான் அலைபாயுதே படம் உருவான சமயத்தில் நைட் 11 மணிக்கு மேல் என் மனைவியை அந்த பைக்கில் கூப்பிட்டு போயிருக்கேன். அவங்களுக்கு பைக்கில் அவுட்டிங் செல்வது மிகவும் பிடிக்கும் என கூறினார்.
இதை கேட்ட ஆண்கள் வர்க்கத்தினர், ஆல் பொண்டாட்டிஸ் கேட்டுக்கோங்க… AR ரஹ்மான் மனைவி எவ்வளவு சிம்பிளான விஷயத்துக்கெல்லாம் ஆசைப்படுறாங்கன்னு… நீங்களும் தான் இருக்கீங்களே! வைர நெக்லஸ் வாங்கிகொடுங்கோ… கார் வாங்குங்கோ… லட்சத்துல சம்பாத்தியம் இருக்கனும் இப்படியெல்லாம் கேட்டு எங்களை டார்ச்சர் பண்றீங்க என கிண்டலாக கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.