விஜய்யின் அரபிக் குத்து பாடலில் அஜித்..! ரசிக்கும் விஜய் ரசிகர்கள்..!

Author: Rajesh
22 February 2022, 1:32 pm

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் பலரின் ஹலோ ட்யூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் உலகளவில் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.   இந்த நிலையில், ரசிகர் ஒருவர், அரபிக் குத்து பாடலை தமிழ் நட்சத்திரங்கள் அஜித், ரஜினி, சிம்பு பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று மிமிக்கிரி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

https://twitter.com/Karuppudevathai/status/1495680433547321346
  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…