யூட்யூப்-ல் “அரபிக் குத்து” அதிர வைத்தாலும்..! ட்டுவிட்டரில் கலக்கும் அஜித் ரசிகர்கள்..!
Author: Rajesh15 February 2022, 1:12 pm
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் பலரின் ஹலோ ட்யூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இதுவரை யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்து, யூட்யூப் ட்ரெண்டிங்கிலும் ‘அரபிக் குத்து’ முதலிடத்தில் இருக்கிறது. அரபிக் குத்து பாடலைக் கொண்டிவரும் விஜய் ரசிகர்களுக்கு மத்தியில், டுவிட்டரில் அஜித் குமார் hashtag – யை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்..