நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் பலரின் ஹலோ ட்யூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் உலகளவில் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுவரை வந்த பாடல்களில் இப்படி ஒரு சாதனையை எந்த ஒரு பாடலும் செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த அரபிக் குத்துப்பாடல் திரையில் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர். விஜய்யின் அந்த டான்ஸ் மூவையும், பூஜா ஹெக்டேவின் அழகையும் ரசிக்க ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளப்பக்கங்களில் ரீல்ஸ்களாக இந்த பாடலை மேலும் பரப்பி வருகின்றனர். இப்படி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படிப்பட்ட இந்தப் பாடலைப் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்த பிறகுதான் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
படம் முழுக்க சீரியசாக இருக்கக்கூடிய இந்த கதையில் இடையில் பாட்டை சொருகினால் படத்தின் திரைக்கதையில் தொய்வு ஏற்படும் என நெல்சன் கருதுவதாக கூறப்படுகிறது. எப்படியோ பாடலையும் ஹிட் ஆக வைத்து அதையும் விளம்பர யுக்தியாக பயன்படுத்திவிட்டார் நெல்சன் திலீப்குமார். இருந்தாலும் படத்தின் கதையோடு கதையாக இந்தப் பாடலை வைத்திருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் உருகத்தான் செய்வார்கள்..
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.