அதே பேய், அதே மிரட்டல்.. சேம் பிஞ்ச் பண்ணும் சுந்தர் சி-யின் ‘அரண்மனை 4’ டிரைலர் வெளியானது ..!(வீடியோ)
Author: Vignesh30 March 2024, 6:46 pm
இயக்குனர் சுந்தர் சி பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர். 2014 -ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகம் மீண்டும் புதிய கூட்டணியில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே பெற்றது.

இருப்பினும் அரண்மனை இரண்டாம் பாகம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதற்கு கிடைத்த வரவேற்பால் சுந்தர் சி ஆர்யாவை வைத்து அரண்மனை மூன்றாம் பாகத்தை உருவாக்கினார். அரண்மனை மூன்றாம் பாகத்திற்கும் கலவையான விமர்சனம் தான் வந்தது.

இந்நிலையில், அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர்சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு என பலரது நடிப்பில் இன்று அதிரடியாக அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி கடந்த மூன்று பாகங்களில் இருந்த அதே கிராபிக்ஸ் அதே மிரட்டல் ஆகிவை இந்த படத்திலும் இருக்கும் என்பது இன்று வெளியாகி உள்ள டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. என்னதான் சுந்தர் சி சேம் பீச் பண்ணாலும் ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து தகுதிகளும் இந்த ட்ரெய்லரில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் களில் தெரிவித்து வருகின்றனர்.