ICUவில் மகள்… ஆனாலும் மக்களுக்கு உதவி – அறந்தாங்கி நிஷாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
Author: Rajesh11 December 2023, 11:29 am
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி சிரிக்க வைத்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்குபெற்று நாள் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் நிஷா மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலத்தில் இறங்கி உதவிகள் செய்து வருகிறார். தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் உயிர்க்கு அச்சம் விளைவித்தது. தொடர்ந்து புயலால் மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அத்யாவசிய தேவைகளுக்குக்கே அல்லல்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். சூர்யா – கார்த்தி இருவரும் இணைந்து ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினர். இந்நிலையில் அறந்தாங்கி நிஷா புயலால் வழவராம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை கொடுத்து உதவி செய்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க திருச்சியில் இருந்து சென்னை வந்து ஆயிரம் பேருக்கு உணவு வழங்க தாம்பரத்தில் ஏற்பாடு செய்து உதவிகள் வழங்கினார். அவரின் செயலை மக்கள் பலர் வெகுவாக பாராட்டினார்கள்.
இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அந்த நேரத்தில் அறந்தாங்கி நிஷாவின் மகளுக்கு Typhoiid Positive வந்ததாம். இதனால் அவர் ICUவில் அனுபாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட இருந்த நேரத்தில் மகளை விட்டுவிட்டு மக்களுக்கு இடைவிடாமல் உதவிகள் செய்துவந்துள்ளது தெரியவர அவரை மக்கள் வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளனர்.