உயிர் போகும் நிலையிலும் உதவி பண்ண யோசிக்கிறாங்க… ஆதங்கத்தை கொட்டிய அறந்தாங்கி நிஷா!

Author: Rajesh
6 December 2023, 3:16 pm

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி சிரிக்க வைத்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்குபெற்று நாள் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

aranthangi nisha - updatenews360

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் நிஷா மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலத்தில் இறங்கி உதவிகள் செய்து வருகிறார். தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் உயிர்க்கு அச்சம் விளைவித்தது. தொடர்ந்து புயலால் மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அத்யாவசிய தேவைகளுக்குக்கே அல்லல்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். சூர்யா – கார்த்தி இருவரும் இணைந்து ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினர். இந்நிலையில் அறந்தாங்கி நிஷா புயலால் வழவராம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை கொடுத்து உதவி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

aranthangi nisha - updatenews360

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க திருச்சியில் இருந்து சென்னை வந்திருக்கிறேன். ஆயிரம் பேருக்கு உணவு வழங்க தாம்பரத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், அதை கொண்டுப்போய் கொடுக்க எந்த வாகனங்களையும் வாடகைக்கு தர மறுக்கிறார்கள். நாங்கள் திருச்சியில் இருந்து வருகிறோம். சாப்பாடு மட்டும் தாம்பரத்தில் செய்ய சொல்லி அங்கிருந்து சாப்பாடு எடுத்துச் செல்ல வண்டி வாடைக்கு கேட்டதற்கு யோசிக்கிறார்கள்.

அதனால் வேறு வழி இல்லாமல் எங்களுடைய காரிலேயே உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு செல்கிறோம். வெள்ளத்தால் வண்டி ஒண்ணும் மூழ்கிடாது. நாங்கள் எங்களுடைய வண்டிலையே போயிட்டு திரும்பி வந்து அந்த வீடியோவையும் போடுகிறோம். தயவுசெய்து இது மாதிரி நேரத்தில் கேட்டால் உதவி செய்யுங்கள். யாரும் முடியாது என்று மறுக்காதீர்கள். உயிருக்கு போராடும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்திடுங்கள் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்