நான் ஸ்கூல் படிக்கும்போது ZERO… ஆனால் என் பொண்ணு – நெகிழ்ந்த நிஷா!

Author: Shree
21 March 2023, 7:54 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் அறந்தாங்கி நிஷா. அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு தனது உறவுக்கார மாமா ரியாஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகளின் பள்ளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிஷா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், இந்த வருடம் நிறைய பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக போய்கிட்டே இருந்தேன், திடீர்னு ஒரு அழைப்பு அறந்தாங்கியில் என்னோட பொண்ணு படிக்கிற பள்ளியில சிறப்பு அழைப்பாளரா நீங்க வரணும்னு கூப்பிட்டாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது நான் மட்டும் இல்ல என்னுடைய கணவரும் சிறப்பு அழைப்பாளரா அழைச்சிருந்தாங்க.

இதுவரைக்கும் பள்ளியில நான் எந்த பரிசு வாங்கினதே கிடையாது ஆனால் நிறைய பள்ளிகளுக்கு பரிசு கொடுப்பதற்கு இப்ப நான் போய்கிட்டு இருக்கேன், அந்த வகையில என் பொண்ணு என் கையால பரிசு வாங்கும் போது தனி சந்தோஷமாக இருந்தது. என்னையும் என் கணவரையும் என் குடும்பத்தையும் கௌரவப்படுத்திய என் மண்ணிற்கும், பள்ளிக்கும் சகோதரி கவிதா சரவணனுக்கும் நன்றி என மகிழ்ச்சி போங்க பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 495

    1

    0