நான் சின்னத்திரை நயன்தாராவா…ஐயோ வேண்டாம்..பிரபல நடிகை புலம்பல்.!

Author: Selvan
21 March 2025, 5:10 pm

அறந்தாங்கி நிஷாவின் முடிவு

நயன்தாரா தன்னை இனிமேல் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்க வேண்டாம் என அறிவித்ததை தொடர்ந்து,இதற்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.அந்த வரிசையில்,தற்போது அறந்தாங்கி நிஷா இனிமேல் யாரும் தன்னை “சின்னத்திரை நயன்தாரா” என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: 4வது குழந்தைக்கு நான் ரெடி..’ஆஸ்கார்’ கொடுக்க நீங்க ரெடியா..மேடையில் நடிகர் கல கல பேச்சு.!

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா,ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்பட்டு வந்தார்.ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கையில் இனிமேல் தன்னுடைய பெயரே அடையாளம் என்பதால் ரசிகர்கள் தன்னை நயன்தாரா எனவே அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து நடிகை குஷ்பு “சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே நயன்தாராவின் முடிவை வரவேற்கிறேன்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அறந்தாங்கி நிஷாவும்,தன்னை இனிமேல் யாரும் “சின்னத்திரை நயன்தாரா” என அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.நயன்தாராவின் இந்த முடிவு தான் இந்த மாற்றத்திற்கும் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?