இந்த மூஞ்சி எல்லாம் டிவில வந்து யாரு பாக்க போறா… கேலி செய்தவர்களின் வாயை பிளக்க வைத்த அறந்தாங்கி நிஷா!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 5:31 pm

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி தனெக்கென காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய என்று பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். பெண் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர்.

அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். ஆனால், இந்த குழுவில் இருந்த யாரும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கவில்லை என்பது தான் சோகம். அதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து மற்றும் காண்டாக்கியது.

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அர்ச்சனா மற்றும் நிஷாவின் பல செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். மேலும், இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது.

தற்போது நிஷா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து வருகிறார். இதே நிகழ்ச்சியில் அர்ச்சனா நடுவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த வருகிறார். தினங்களுக்கு முன்னர் நிஷா வீடு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுவும் தனியார் சேனல் ஒன்று நிஷா ஒரு பிராம்மாண்ட பங்களாவை வாங்கி இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தது.

இந்த செய்தியை கண்டு பலர் நிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலர் நிஷாவை கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அந்த செய்தியை பகிர்ந்த ஒரு ‘அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க .

இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்….. சத்தியமா சொல்றேன் இது என் வீட்டு வீடு இல்லங்கோ’ என்றுபதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அந்த யூடுயூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நிஷா, தான் கட்டும் புதிய வீட்டினை காட்டியுள்ளார், அதில் பலரும் வந்து இந்த மூஞ்சு எங்க பலரும் வீடு கட்ட போகிறது என்று கேட்டார்கள், அதை மனதில் வைத்து தான் சொந்த வீடு கட்டியே ஆகணும் என்று கட்டி வந்தார். இப்படி ஒரு நிலையில், தான் சொன்னபடியே சொந்தமாக வீடு கட்டி குடியேறி இருக்கிறார் நிஷா.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 453

    0

    0