அறந்தாங்கி நிஷாவின் சம்பளம் இவ்வளவா ? பணத்தை வீணடிக்கிறீங்களே விஜய் டிவி!
Author: Shree9 March 2023, 2:03 pm
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி சிரிக்க வைத்தவர் அறந்தாங்கி நிஷா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்குபெற்று நாள் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நக்கீரன் கோபால் கலந்துக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் நிஷாவை கிண்டலடித்த ராமர், நீயெல்லாம் ஒரு ஆங்காரா, அருண் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 5 ஆயிரம் பேமெண்ட் வாங்கிட்டு போ என்று கலாய்த்தார்.
மேலும், பணத்தை வீணடிக்கிறீர்கள் விஜய் டிவி, உங்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியல, தொகுப்பாளினியே இல்லாத ஒருத்தருக்கு இவ்வளவு சம்பளம் வேஸ்ட் என்று கலாய்த்துள்ளார்.
அப்படி பார்த்தால் நிஷா ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். மற்ற நிகழ்ச்சிகளுக்கு இதை விட அதிகம் வாங்குவாராம்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தபோது ரூ 500 சம்பளம் வாங்கிய நிஷா பிக்பாஸுக்கு சென்ற பின்னர் இம்புட்டு தொகை ஏற்றிவிட்டாராம்.