அடுத்த படத்தின் அறிவிப்பு
தமிழ் சீரியல் நடிகையாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து கடந்த வருடம் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி அதில் வெற்றிப்பட்டதையும் வாங்கினார் நடிகை அர்ச்சனா.
தற்போது மும்முரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.சமீபத்தில் டிமான்டி காலனி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
இதன் காரணமாக தற்போது தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில்,தான் நடிக்க இருப்பதாக அக்ரீமெண்ட் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அர்ச்சனாவின் புது பட அறிவிப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.