அர்ச்சனா தான் Winner’னு எப்போவோ தெரியும்… அன்றே கணித்த அமீர்!

Author: Rajesh
18 January 2024, 2:14 pm

பிக்பாஸ் 7 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

bigg boss archana

இந்நிலையில் அர்ச்சனா டைட்டில் வென்றது குறித்து சில மாதங்களுக்கு முன்னரே முன்னாள் போட்டியாளர் அமீர் பேசியுள்ள வீடியோ தற்ப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, ” அந்த பொண்ணு உண்மையிலே ரொம்ப soft தான். அவங்க இப்போ பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து கேட்கும் கேள்விகள் அனைத்தும் மக்கள் அனைவரும் கேட்பது தான். எனவே அர்ச்சனா தனது நியாயமான கேள்விகளை முன்வைத்து வருவதால் அவர் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார் என பேசியுள்ள அமீரின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாக, ” அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்பதை அன்றே கணித்தார் அமீர் என மக்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 364

    0

    0