பாதியிலே கழட்டிவிட்ட சூர்யாவை வச்சி மீண்டும் படம் பண்ணுவீங்களா? பாலாவின் நறுக் பதில்!

Author: Shree
6 November 2023, 7:59 pm

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், சூர்யா அவரது இயக்கத்தில் வணங்கான் படத்தில் தயாரித்து நடித்து வந்தார். ஆனால், அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து சூர்யா நடிக்க இருந்த ரோலில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண் விஜய் சேறும் சகதியுமாக முக்கி எழுந்து ஒரு கையில் பெரியார் சிலையும் மறுகையில் பிள்ளையார் சிலையும் வைத்திருந்தபடி வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலாவிடம் ” பாதியில் விட்டுச்சென்ற சூர்யாவுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவீங்களா? என கேட்டதற்கு ” நிச்சயம் பண்ணுவேன். சூர்யா என் தம்பி மாதிரி” எனக்கூறி அத்தனை வதந்திங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

அவரையும் வச்சி பண்ணக்கூடாத டார்ச்சர்களையெல்லாம் செய்து கொடுமை படுத்தி வருகிறராம் பாலா. இருந்தாலும் அருண் விஜய் , பரதேசி அதர்வா, அவன் இவன் விஷால், ஆர்யா, இவர்களை போல் பேசப்படவேண்டும் என எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு நடித்து வருகிறாராம்.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…