அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டாங்களா..? – ரச்சிதாவின் அதிரடி முடிவு !

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 2:02 pm

போன வருடத்துலேந்து, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விரைவில் அடுத்த திருமணத்தை செய்து கொள்வதாக சின்னத்திரை வட்டாரங்களில் தகவல் தீயாக பரவி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.

தற்போது இது சொல்லமறந்த கதை சீரியலில் நடித்து வரும் இவர், கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ் அவர்களை பிரிந்தார். மேலும், அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்ற தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?