மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரேவதி சம்பத் உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து அதிர்ச்சி கிளப்பி வருகிறார்கள் .அந்த வகையில் தற்போது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பிரபல நடிகர் விஷால் இச்சம்பவம் குறித்து பேத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
கேரளா சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு சினிமா வாய்ப்புக்காக நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள். கேரளாவை போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்பட்டு விடும் என நடிகர் விஷால் அதிரடியாக பதில் கொடுத்தார்.
இந்நிலையில் விஷாலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கேரளாவில் நடந்திருக்கும் இந்த விஷயம் ரொம்ப நல்லதுக்கு தான். இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் எல்லா துறைகளிலுமே நடந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் மட்டுமில்ல தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிலும் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதிகமான பண நடமாட்டம் உள்ள துறை சினிமா துறை என்பதால் இங்கு அதிகாரம் செலுத்தும் நபர்களுக்கு நபர்களும் அதிகமாக இருக்கிறார்கள். இதனிடையே விஷால் இந்த விஷயத்திற்கு குரல் கொடுப்பதற்கு முன் அவர் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். நடிகைகள் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்து நடிகர் சங்கத்தை அணுகும் போது அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் அச்சமும் இல்லாமல் கூறுகிறார்களா? இல்லை….
எனவே முதலில் விஷால் அதை சரி செய்ய வேண்டும். கடந்த தலைமுறை இயக்குனரான பாரதிராஜா உள்ளிட்டோர் இதுபோன்ற பாலியல் தொல்லைகளில் எந்த நடிகையும் ஈடுபடுத்தவே இல்லை. அவர் மிகச்சிறந்த மனிதர். அதேபோல் இந்த காலத்தில் இருக்கும் இளம் இயக்குனர்களான மாரி செல்வராஜ், பாண்டிராஜ் , ஏ. எல் விஜய் போன்றோர் மிகச் சிறந்த இயக்குனர்கள் .
இவர்களால் பாலியல் துன்புறுத்தல் எந்த ஒரு நடிகைக்கும் நடக்கவே இல்லை என உறுதியாக கூறுவார்கள் அதே போல் நடிகர்கள் என எடுத்துக்கொண்டால் விஜய், அஜித், சூர்யா, அருள்நிதி, கார்த்தி சிவகார்த்திகேயன் போன்ற இளம் தலைமுறை நடிகர்களால் பாலியல் சுரண்டல்கள் இதுவரை நடைபெறவில்லை. நடைபெறவும் நடைபெறாது என லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் தைரியமாக தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
This website uses cookies.