ஹீரோவாக களமிறங்கும் சங்கர் மகன்…கம்பேக் கொடுப்பாரா விஜய் பட இயக்குனர்.!
Author: Selvan18 March 2025, 5:24 pm
பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் கதாநாயகன்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்,தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: 25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!
இதற்கு முன்னதாக அவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருந்ததோடு,தனது தந்தை ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி,அர்ஜித் விரைவில் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.போக்கிரி,வில்லு,எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கிய பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தின் மூலம் இயக்குநராக மீண்டும் திரும்ப உள்ளார்.
அர்ஜித் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே ஷங்கரின் மகளான ஐஸ்வர்யா தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது அவருடைய மகனும் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி ரசிகர்களை கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.