உண்மையிலே LOVE பண்றாங்களோ? நடிகையின் கால்களை தொட்டு அர்ஜுன் தாஸ் செய்த செயல் – வைரல் வீடியோ!
Author: Shree20 September 2023, 5:58 pm
தென்னிந்திய சினிமாவின் தற்போதைய ஸ்டைலிஷ் வில்லனான நடிகர் அர்ஜுன் தாஸ் 2012ல், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். இதனிடையே அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் பரவலாக அறியப்பட்டார். இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும் அதைவிட கர்ஜிக்கும் சிங்கம் போன்ற அவரது குரல் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது.
அதன் பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இதனிடையே பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் காதல் கிசுகிசுப்பட்டார். அண்மையில் ஐஸ்வர்யா லட்சுமி அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோ ஒன்று வெளியிட அது அவர்கள் காதலிப்பதை மறைமுகமாக உறுதி படுத்தியது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என கூறினார்கள்.
இந்நிலையில் அர்ஜுன் தாஸ் துஷார விஜயன் இணைந்து அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் நடிகை துஷாரா விஜயன் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஆடை கீழே இருந்த டயரில் மாட்டிக்கொண்டிருந்தது. இதனை உற்று கவனித்த அர்ஜுன்தாஸ் சட்டென அந்த ஆடையை விலக்கி எடுத்து விட்டார். மிகப்பெரிய நடிகர் இவ்வளவு தாழ்வு மனப்பான்மை உடைய குணத்தோடு இருப்பதை பார்த்து எல்லோரும் வியந்து பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் ஒருவேளை இவங்க காதலிக்கிறாங்களோ? என சந்தேக கண்ணோட்டத்தோடு அந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ: