அப்போ அது வதந்தி இல்லையா …? பிரபல நடிகையுடன் காதலை ஒப்புக்கொண்ட அர்ஜுன் தாஸ்!

Author: Shree
14 May 2023, 4:42 pm

தென்னிந்திய சினிமாவின் தற்போதைய ஸ்டைலிஷ் வில்லனான நடிகர் அர்ஜுன் தாஸ் 2012ல், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். இதனிடையே அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் பரவலாக அறியப்பட்டார். இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும் அதைவிட கர்ஜிக்கும் சிங்கம் போன்ற அவரது குரல் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது.

அதன் பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இதனிடையே பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் காதல் கிசுகிசுப்பட்டார். அண்மையில் ஐஸ்வர்யா லட்சுமி அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோ ஒன்று வெளியிட அது அவர்கள் காதலிப்பதை மறைமுகமாக உறுதி படுத்தியது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் உங்களுக்கு லவ் மேரேஜா? அரேஞ்ச் மேரேஜா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன் தாஸ் நோ மேரேஜ் தான் என கூற கூட்டத்தில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி வெட்கத்தோடு சிரித்தார். இன்னுமா காதலை பொத்தி பொத்தி வைக்குறீங்க? அத ஊருக்கே தெரிஞ்சுபோச்சே அப்புறம் என்ன? இப்போ ஐஸ்வர்யா முகத்தில் தெரிந்த அந்த புன்னகையில் பதில் கிடைச்சுப்போச்சு நீங்க வேலைய பாருங்க அர்ஜுன் சார் என ரசிகர்கள் கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?